நிர்வாகப்பிரிவு

Administrative Wing

 

மாநிலத்தில் நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு, உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மருத்துவமனையில் இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் புனரமைப்பு நுண் அறுவை சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய்  அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகவியல் சிகிச்சைப் பிரிவு,இரத்தநாள அறுவை சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆகிய 9 உயர் சிறப்புப் பிரிவுகள் 400 படுக்கைகளுடன் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 21.02.2014 அன்று திறந்து வைக்கப்பட்டு , நவீன மருத்துவ கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 01.04.2015 வரை 90931 புறநோயாளிகள் மற்றும் 12800 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 24497 கதிர்வீச்சு பரிசோதனைகள் ,36735 ஆய்வாக   பரிசோதனைகள், 1977 அறுவை சிகிச்சைகள் , 1321 இதய பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

Tamil Nadu Government Multi Super Specialty Hospital has been established in Omandurar Government Estate, Chennai for providing better treatment for various ailments to the poor and needy. In this Super Specialty Hospital, nine critical care specialties i.e. Cardiology, Cardio Thoracic Surgery, Hand and Reconstructive Micro Surgery, Medical Oncology, Surgical Oncology, Neurology, Neuro Surgery,Nephrology, Vascular Surgery and Post Operative Care and ICU are functioning with bed strength of 400 beds. The Hospital was inaugurated by the Hon’ble Chief Minister on 21.02.2014 and the Hospital is functioning with sophisticated equipments. As on 01.04.2015 over 90931 out-patients and 12800 in-patients have been treated. 24497 radiological investigation, 36735 laboratory investigations, 1977 surgeries, 1321 cardiac angio and other interventions have been carried out benefiting poor and needy people.